The Social Science Collective

Short Story / சிறுகதை

சாண்பிள்ளை

சாண்பிள்ளை

ஆலிஸ் மன்ரோ விமரிசகர்களால் கனடா நாட்டு ஆன்டன் செகாவ் என அன்புடன் கொண்டாடப்படுகிறார். தனது கிராமத்தின் எளிய மனிதர்களை, அதன் பழமை வாசனையோடு அவர் கொண்டாடுகிறார். 2013ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரது ‘டியர் லைஃப்’ (அட கடவுளே!) சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது. தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன் அப்பா நரிப் பண்ணை வைத்திருந்தார். அதாவது, ‘வெள்ளி’ நரிகள். வெண்திட்டுகள் கொண்ட செந்தாய்கள். நீள் முற்ற வெளியில் வரிசையாய் நரிக் கூண்டுகள். இலையுதிர் காலத்திலும், குளிர்காலத் துவக்கத்திலும் அவற்றின் தோல் திரட்சியடைந்திருக்கும். அப்பா அவற்றைக்… Read more →

பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.  நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும்.  கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது.  இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை.  இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது… Read more →

நாடகக்காரி        எழுதியவர் : அண்டன் செகவ்

நாடகக்காரி எழுதியவர் : அண்டன் செகவ்

அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்து வந்தாள்.      அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் சகிக்க முடியவில்லை. கோல்ப்பக்கோவ், அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு மிகவும் மட்ட ரகமான போர்ட் ஒயின் பாட்டிலைக் காலி செய்ததினால், சிடுசிடு என்று பேசிக் கொண்டிருந்தான். இருவருக்குமே அன்று பேச்சில் லயிப்பில்லை. வெயில் தணிந்தால் வெளியே சென்று காற்று… Read more →

பாரதியாரின் சில சிறுகதைகள்

பாரதியாரின் சில சிறுகதைகள்

சாஸ்திரியார் மகன் ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால் அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய் குழந்தாய் ஏன் அழுகிறாய்? என்று கேட்டான். பையன் – வண்டி ஒடிஞ்சி போச்சி? சிப்பாய் – இதற்காக அழாதே. வீட்டிற்கு போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார். பையன் – எங்கப்பா சாஸ்திரியார் அவராலே வண்டியை நேர்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கி… Read more →

Social Media Auto Publish Powered By : XYZScripts.com