The Social Science Collective

தமிழ்

தமிழ்

இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும் எழுதியவர் : கலாநிதி ந. முத்து மோகன்

கடந்த இருபது ஆண்டுகளில் இந்து மதம் குறித்த ஆய்வுகள் சில புதிய தளங்களை நோக்கி நகர்ந்துள்ளன. அவை குறித்து ஒரு கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. ஆய்வுத்தளங்களில் என்ன நடந்திருக்கிறது என்று கணக்கெடுத்துக் கொண்டால்தான் அவற்றை நாம் அரசியலாக்க முடியும். இந்துத்துவம் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்துவரும் சூழலில், மாற்று அரசியலுக்கு நாம் தயாராகவில்லை எனில் தோல்வியடைய நேரிடும். சமீப காலங்களில் இந்து மதம் குறித்து நடந்துள்ள ஆய்வுகளில் பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்ற சிந்தனைப் போக்குகளின் செல்வாக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 1980… Read more →

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…” சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன்… Read more →

மதுரையின் சிறுதெய்வங்கள் தெரியாத செய்திகள்

மதுரையின் சிறுதெய்வங்கள் தெரியாத செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நில அளவை செய்யப்பட்ட நகரம் மதுரை என்பதை“புலவர் பாடாது வரைக என் நிலவரை” என்ற புறநானூற்றின் 72வது பாடலால் அறியலாம். தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியன் காலத்தில் நிலம் சர்வே செய்யப் பட்டதாக இப்புறப்பாடல் கூறுகிறது. வேலூரை வெயில் நகர், நெல்லை அல்வா நகர், சேலத்தை மாங்கனி நகர், கோவையைப் பஞ்சாலை நகர், தஞ்சாவூர் நெற்களஞ்சியம், தூத்துக்குடியை முத்து நகர், காஞ்சிப்பட்டு என்னும் போது மதுரையை மட்டும் கோவில் மாநகர் என்றே தமிழ்நாடு அழைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த… Read more →

சாதி உருவாக்கத்தில் வணிகரின் பங்கு

சாதி உருவாக்கத்தில் வணிகரின் பங்கு

சாதிய வரலாறுகள் அனைத்தும் பொது வாக கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஆரம்ப மாகின்றன. அப்படிப் பார்க்கும்போது இன்றுள்ள சாதிகள் அதற்கு முன்பு என்னவாய் இருந்திருக்கும்? நிலவியல் அடிப்படையிலும், தொழில் அடிப்படை யிலும், பண்பு நலன்கள் அடிப்படையிலுமே குடிகள் என்ற பெயரிலும், குலங்கள் என்ற பெயரிலும் அமைந்திருந்தன. பிற்காலத்தில் சமயங்கள் அடிப் படையிலும் சாதிகள் பலவாய்த் தோன்றின.1 குமரிக் கண்ட காலத்தில் மக்கள் ஏழு குடி களாய் வாழ்ந்தனர் (தமிழ் வரலாறு. ஞா. தேவ நேயப் பாவாணர்.ப. 14) அவர்கள் ஏழ்தெங்க நாடு, ஏழ்… Read more →

என் கணவர்

என் கணவர்

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

'இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்' வீரமாமுனிவர்

‘இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்’ வீரமாமுனிவர்

வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் வந்து, தமிழ் பயின்று, சிறந்த காப்பியம் ஒன்றைத் தமிழில் படைத்த பெருமைக்குரியர் வீரமாமுனிவர்!

"முள்கிரீடமாய் மாற்றப்படும் அடையாளம்"

“முள்கிரீடமாய் மாற்றப்படும் அடையாளம்”

என் இளமைக் காலம் பேரணாம்பட்டிலும், ஆம்பூரிலுமாகக் கழிந்தன. இந்த இரண்டு ஊர்களும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டத்தில் இருப்பவை. அப்பா சின்னதுரை கடும் உழைப்பாளி. அவர் சின்ன வயதில் ஆண்டையிரிடம் வேலை செய்திருக்கிறார். மாடுகளை மேய்ப்பதற்கும், வயல் வேலைகளைப் பார்ப்பதற்கும் தினம் அவர் அதிகாலமே போய்விட வேண்டும். இல்லையென்றால் ஆண்டையும், அவருடைய ஆட்களும் வந்து என் அப்பாவை அடித்து இழுத்துப் போவார்களாம். அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பா இதுபற்றிப் பேசியதில்லை. அவர் இளைஞரான பின்பு ஆண்டை வேலைக்குப் போவதை விட்டுவிட்டு, பீடி… Read more →

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

அறிவுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான அந்த முரண், மார்க்சியச் சொல்லாடல்களுக்குள் இறங்கியபோது, பொருளாதாரத்திற்கும் பண்பாட்டுக்கும் இடையிலான முரண்பாடாகவும், பண்பாடுகளைத் தக்கவைப்பதற்கும் மாற்றுவதற்கும் இடையிலான முரண்பாடாகவும் புதுவடிவங்களைப் பெற்றது.

பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.  நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும்.  கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது.  இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை.  இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது… Read more →

பிரளயனின் வஞ்சியர் காண்டம்

பிரளயனின் வஞ்சியர் காண்டம்

தமிழுக்கும் நாடகத்திற்கும் ஒரு உயிர்ப்புரீதியான தொடர்பு உண்டு. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் ஒரு அங்கமாக இருந்தது நாடக தமிழ். தமிழர்கள் நாடககலை மீது எளிதில் ஈர்க்கப்படுவதற்கு, கடந்த 1500 வருடங்களாக இங்குக் கூத்துக்கலை உயிர்ப்புடன் இருந்ததும் ஒரு காரணம். 1500 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தோன்றிய அகத்தியம், கூத்து நூல் போன்றவை, தமிழின் நாடக இலக்கணத்துக்குச் சான்றாக இன்றும் அமைகிறது. இங்குத் தெருக்கூத்து மூலம் கிராமத்து விழாக்களின் போது அரங்கேற்றப்பட்ட இராமாயண மகாபாரதக் கதைகள் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இவற்றின் மூலம்… Read more →

Social Media Auto Publish Powered By : XYZScripts.com